ஆசிரியர் காலியிடம் விவரம் சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் காலியிடம் விவரம் சேகரிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடம் குறித்து விவரம் சேகரிக்கும் பணி நடக்கிறது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாகவே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. காலிப்பணியிடம் கடந்தாண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடம் குறித்து விவரம் சேகரிக்கும் பணி நடக்கிறது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாகவே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. காலிப்பணியிடம் கடந்தாண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்றவாறு காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாட வாரியாக விவரம் சேகரிக்கும் பணி நடக்கிறது. தலைமையாசிரியர்கள் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X