தமிழ்நாடு

பாதிப்பு குறைந்ததென அலட்சியம் வேண்டாம்!

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 29 ஆயிரத்து 520 பேர் பாதித்து, 26 ஆயிரத்து 991 பேர் குணமடைந்துள்ளனர். 2,047 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு கணக்கின்படி 482 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த மே யில் உச்சம் தொட்ட கொரோனா ஜூன் தொடக்கம் முதல் மெல்ல குறைந்து வருகிறது. அதேசமயம் உயிரிழப்போர் எண்ணிக்கை குறையவில்லை. கடந்த 10 நாட்களில் 85 பேர் உயிரிழந்தாக அரசு தகவல் தெரிவித்தாலும் உண்மை நிலவரம் அதை

மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 29 ஆயிரத்து 520 பேர் பாதித்து, 26 ஆயிரத்து 991 பேர் குணமடைந்துள்ளனர். 2,047 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு கணக்கின்படி 482 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த மே யில் உச்சம் தொட்ட கொரோனா ஜூன் தொடக்கம் முதல் மெல்ல குறைந்து வருகிறது.

அதேசமயம் உயிரிழப்போர் எண்ணிக்கை குறையவில்லை. கடந்த 10 நாட்களில் 85 பேர் உயிரிழந்தாக அரசு தகவல் தெரிவித்தாலும் உண்மை நிலவரம் அதை விட அதிகமாகத்தான் இருக்கக் கூடும். நேற்று முன்தினம் 22 பேர், நேற்று 5 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது: இறப்பவர்கள் பெரும்பாலும் இணை நோய் உள்ளவர்களாக இருந்தாலும், தொற்று முற்றிய நிலையில் வந்ததே இந்த நிலைமைக்கு காரணம். அரசுதான் ஊரடங்கில் தளர்வை கொடுத்துள்ளதே தவிர, கொரோனா கொடுக்கவில்லை. எனவே அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

சமூக இடைவெளிதான் பிரதானமானது. அதனுடன் முகக்கவசம் அணிந்தாலே நோய் தொற்றை தவிர்த்து விடலாம். எனவே பாதிப்பு குறைந்ததென அலட்சியம் காட்ட கூடாது. சாதாரண வார்டுகளில் 600 பேர் இருந்தால் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெறுவோர் 700 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே, தனித்திருந்து, விழித்திருப்பதே நல்லது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X