பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடிக்கு மண் பரிசோதனை அவசியம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'மானாவாரி, இறவை சாகுபடியை துவங்கும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியம்' என, திண்டுக்கல் வேளாண் உதவி இயக்குனர் நாகேந்திரன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. மானாவாரி மற்றும் இறவை சாகுபடி ஜூலையில் தொடங்கும் முன்பாக நிலவளம் அறிய மண் பரிசோதனை செய்ய வேண்டும். வரப்புகளில் இருந்து 2 மீ., இடைவெளி விட்டு,

திண்டுக்கல் : 'மானாவாரி, இறவை சாகுபடியை துவங்கும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியம்' என, திண்டுக்கல் வேளாண் உதவி இயக்குனர் நாகேந்திரன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. மானாவாரி மற்றும் இறவை சாகுபடி ஜூலையில் தொடங்கும் முன்பாக நிலவளம் அறிய மண் பரிசோதனை செய்ய வேண்டும். வரப்புகளில் இருந்து 2 மீ., இடைவெளி விட்டு, உரக்குழிகள், தாவர கழிவுகள் இல்லாத இடத்தில் செடி, புற்களை சுத்தப்படுத்தி அந்த இடத்தில் 'V' வடிவ குழி தோண்ட வேண்டும்.

தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களுக்கு 15 செ.மீ., ஆழம், தென்னை உட்பட மரப்பயிர்களுக்கு 90 செ.மீ., வரை குழிதோண்டி, பக்கவாட்டில் கீழிலிருந்து மேலாக 1 செ.மீ., கனத்திற்கு மண்ணை சுரண்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மண் மாதிரி எடுத்து அதை பலவாறு பரப்பி, கலக்கி அரை கிலோ மண்ணை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். ஆய்வு முடிவின்படி உரமேலாண்மை செய்தால் மண் வளத்தை பாதுகாக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X