பொது செய்தி

தமிழ்நாடு

சேலையில் வேலி கட்டும் விவசாயிகள் : வடமதுரையில் நூதனம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
வடமதுரை : விவசாய நிலங்களில் மயில்களிடம் இருந்து மகசூலை பாதுகாக்க நுாதன முறையில் சேலைகளால் வேலி கட்டுகின்றனர் வடமதுரை விவசாயிகள்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை வடமதுரையில் புத்துார், பஞ்சந்தாங்கி மலைப்பகுதிகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மயில்கள் காணப்பட்டன. தேசிய பறவையான மயிலை வேட்டையாடுவது குற்றம் என்பதால், விவசாயிகள் அதற்கு தொந்தரவு தருவதில்லை. இதனால்

வடமதுரை : விவசாய நிலங்களில் மயில்களிடம் இருந்து மகசூலை பாதுகாக்க நுாதன முறையில் சேலைகளால் வேலி கட்டுகின்றனர் வடமதுரை விவசாயிகள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை வடமதுரையில் புத்துார், பஞ்சந்தாங்கி மலைப்பகுதிகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மயில்கள் காணப்பட்டன. தேசிய பறவையான மயிலை வேட்டையாடுவது குற்றம் என்பதால், விவசாயிகள் அதற்கு தொந்தரவு தருவதில்லை. இதனால் சில ஆண்டுகளிலேயே வடமதுரையில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவை பூச்சிகளை அதிகளவில் உண்பதால் விவசாயிகளுக்கு மறைமுகமாக உதவி செய்கிறது. கூடவே நெல், சப்போட்டா, தக்காளி, வெண்டை என பல வகை காய், கனிகளையும் கொத்தி தின்பதால் விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கிறது.இதனால் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் வயலை சுற்றிலும் வண்ணச் சேலை, துணிமணிகளால் வேலி அமைக்கின்றனர். இதனை கண்டு கலவரமடையும் மயில்கள் வயலை நெருங்குவதில்லை. இதனால் பாதிப்பு குறைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X