தமிழ்நாடு

சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு ரூ.41.25 கோடி... ஒதுக்கீடு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
தோட்டக்கலை பயிர் சாகுபடியில் நீர் மேலாண்மை அவசியத்தை விவசாயிகள் பின்பற்ற 2008 முதல் சொட்டுநீர் பாசன முறை தேனி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. காய்கறி, மா, வாழை, எலுமிச்சை, மலர்சாகுபடி செய்யும் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இவ் வசதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். மாவட்டத்தில் தோட்டக்கலை


தோட்டக்கலை பயிர் சாகுபடியில் நீர் மேலாண்மை அவசியத்தை விவசாயிகள் பின்பற்ற 2008 முதல் சொட்டுநீர் பாசன முறை தேனி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. காய்கறி, மா, வாழை, எலுமிச்சை, மலர்சாகுபடி செய்யும் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இவ் வசதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு 40 ஆயிரம் எக்டேர். இதில் 13 ஆண்டுகளாக சொட்டுநீர் பாசன வசதியினை 24 ஆயிரம் எக்டேர் பயன்படுத்தியுள்ளனர். எஞ்சிய 16 ஆயிரம் எக்டேரில் திட்டம் செயல்படுத்த வேண்டும். 2021-22ல் 7ஆயிரத்து 250 எக்டேர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

நிபந்தனைகள்
திட்டத்திற்கு நிதி தாராளம் வழங்கினாலும் பயனாளிகளை தேர்வில் கடும் நிபந்தனைகள் உள்ளதால் அதிகாரிகளால் இலக்கை எட்ட முடியவில்லை. பயனாளிகள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயிக்கு 2 ஏக்கரும், பெரிய விவசாயிக்கு 12 ஏக்கர் வரை பயன்பெறலாம். இத் திட்டத்தில் ஒரு விவசாயி 7 ஆண்டிற்குள் பயன்பெற்று இருந்தால் திரும்ப இவ்வசதிபெற இயலாது.

ஏற்கனவே சிறு விவசாயி என பயன்பெற்றவர் தன்னிடம் எஞ்சியுள்ள 2 ஏக்கருக்கு சொட்டுநீர் வசதி செய்ய பதிவு செய்தால் அவர் பெரிய விவசாயி என கருதி, அவர் ஏற்கனவே அரசிடம் பெற்ற மானியத்தை திரும்ப செலுத்தக் கூறுகின்றனர் அல்லது 75 சதவீத மானியத்தில் பயன்பெற வலியுறுத்துகின்றனர். கடந்த ஆண்டு இலக்கில் 2500 எக்டேருக்கு நிதி உள்ளது. 2021-22க்கு ரூ.41.25 கோடி வந்துள்ளதால் அதிகாரிகள் பயனாளிகளை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X