சிறுமி திருமணங்களை தடுக்க கையேடு வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணங்களை தடுக்க கையேடு வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
தேனி : 'சிறுமி திருமணங்களை தடுப்பது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய கையேடு ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது,'' என மாவட்ட குழந்தைகள் நலக்குழுத்தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தேனிமாவட்டத்தில் சிறார் குற்றங்கள் பெருகி வருகின்றன. இங்கு கடமலை, ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் தாலுகா பகுதிகளில் சிறுமி திருமணங்கள் நடந்து

தேனி : 'சிறுமி திருமணங்களை தடுப்பது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய கையேடு ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது,'' என மாவட்ட குழந்தைகள் நலக்குழுத்தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தேனிமாவட்டத்தில் சிறார் குற்றங்கள் பெருகி வருகின்றன. இங்கு கடமலை, ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் தாலுகா பகுதிகளில் சிறுமி திருமணங்கள் நடந்து வருகின்றன. அரசு பாதுகாப்பான குழந்தைப் பருவத் திட்டம் மூலம் வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு, சிறுமி திருமணங்களை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட தலைப்புக்களில் கருத்துக்கள் அடங்கிய கையேடு தயாரிக்கப்பட்டு ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், கொத்தடிமைகள் மீட்பு, சிறுமி திருமணங்களை தடுப்பது, போலீசாருக்கு விபரங்களை அளிப்பது என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X