சேதமடைந்த ரோடுகள்; தூர்வாரப்படாத ஓடை; சிரமத்தில் காமராஜபுரம் மக்கள்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
போடி : போடி அருகே காமராஜபுரத்தில் தெருக்களில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். சாக்கடை சேதமடைந்ததால் வீடுகளின் முன் கழிவுநீர் தேங்குகிறது. துார்வாரப்படாத அருப்புக்கத்தான் நீர் வரத்து ஓடையில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. போடி ஒன்றியம் காமராஜபுரம் ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தெருக்களில் ரோடு

போடி : போடி அருகே காமராஜபுரத்தில் தெருக்களில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

சாக்கடை சேதமடைந்ததால் வீடுகளின் முன் கழிவுநீர் தேங்குகிறது. துார்வாரப்படாத அருப்புக்கத்தான் நீர் வரத்து ஓடையில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. போடி ஒன்றியம் காமராஜபுரம் ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டான நிலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாக்கடை தரைப்பாலம் பெயர்ந்ததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்கு முன் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடகமேடை எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயனற்றுள்ளது. சாக்கடை , ரோடு சீரமைத்து அடிப்படை வசதி செய்துதர ஊராட்சியை மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

சுகாதாரக்கேடு

பி.ரவீந்திரன்: தெருக்களில் சாக்கடை துார்வாரப்பட்டு பல மாதமான நிலையில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஸ்ரீராம் நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் நடுத்தெருவில் சிமென்ட் ரோடு சேதம் அடைந்து டூவீலர் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் மின்தடையின்போது விபத்து ஏற்படுகிறது. ரோடு, சாக்கடை தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிரமம்

எஸ்.முனிராஜ்: நடுத்தெரு, விவேகானந்தர் தெற்கு தெரு உள்ளிட்டவற்றில் ரோடு சேதமடைந்து மக்கள் சிரமப்படுகின்றனர். துார்வாரப்படாத அருப்புக்கத்தான் நீர் வரத்து ஓடையில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாத நிலையில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ரோட்டை சீரமைத்து ஓடையை துார்வாரி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த இனியாவது ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X