பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் கட்டுமான பணி மேலும் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மூணாறு : மூணாறில் முறையாக திட்டமிடாமல் இடித்த பாலத்தின் கட்டுமான பணி முடங்கியதால் மாவட்ட ஊராட்சி மேலும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது.மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் ரோட்டில் பழுதான பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க கடந்த செப்டம்பரில் மாவட்ட ஊராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கி பணி துவங்கின.பாலம் இடிக்கப்பட்ட பின் நடத்திய மண் பரிசோதனையில் துாண்கள்

மூணாறு : மூணாறில் முறையாக திட்டமிடாமல் இடித்த பாலத்தின் கட்டுமான பணி முடங்கியதால் மாவட்ட ஊராட்சி மேலும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது.

மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் ரோட்டில் பழுதான பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க கடந்த செப்டம்பரில் மாவட்ட ஊராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கி பணி துவங்கின.பாலம் இடிக்கப்பட்ட பின் நடத்திய மண் பரிசோதனையில் துாண்கள் அமைத்து கட்ட வேண்டும் என தெரியவந்தது. அதற்கு ஒதுக்கிய நிதி போதாது என கருதி ஒப்பந்ததாரர் பணிகளை கைவிட்டார்.

அதனால் சுப்பிமணியசுவாமி கோயில், பொதுபணித்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.பாலம் கட்டுமான பணிகளுக்கு மாவட்ட ஊராட்சி மேலும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியதாகவும், 3 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா தெரிவித்தார். ஆனால் தென்மேற்கு பருவ மழை துவங்கியதால் குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X