சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய வியாபாரிகளுக்கு நோட்டீஸ்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கம்பம் : கொரோனா தடுப்பு விதிமீறி கம்பம் உழவர் சந்தைக்கு வெளியில் கடை அமைத்த வியாபாரிகள் 9 பேருக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் கம்பம் உழவர் சந்தை சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 10 க்கும் குறைவான வாகனங்களில் மட்டுமே வியாபாரம் செய்யப்படுகிறது. மற்றவர்கள் உழவர் சந்தைக்கு வெளியில்

கம்பம் : கொரோனா தடுப்பு விதிமீறி கம்பம் உழவர் சந்தைக்கு வெளியில் கடை அமைத்த வியாபாரிகள் 9 பேருக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் கம்பம் உழவர் சந்தை சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 10 க்கும் குறைவான வாகனங்களில் மட்டுமே வியாபாரம் செய்யப்படுகிறது. மற்றவர்கள் உழவர் சந்தைக்கு வெளியில் கடை அமைத்துள்ளனர். சில நாட்களாக கூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்ததால் அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் அதை தொடர்ந்தனர். நேற்று காலை உழவர் சந்தை கண்காணிப்பு அலுவலர் கண்ணதாசன், உதவி அலுவலர் மாரிச்சாமி ஆகியோர், 9 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். அதில் 'பேரிடர் கால சட்டப்படி ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது,' என்பதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X