பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு வருவோர் விபரம் தெரிவிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
தேனி : கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் பற்றி விபரம் அளிக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தேனி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு உள்ள சிலர் தனியார் மருத்துவமனைகளில் தற்காலிக சிகிச்சை பெற்று செல்வதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு

தேனி : கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் பற்றி விபரம் அளிக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தேனி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு உள்ள சிலர் தனியார் மருத்துவமனைகளில் தற்காலிக சிகிச்சை பெற்று செல்வதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் லேசான காய்ச்சல், தீவிர காய்ச்சல், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களை பற்றிய முழுவிபரம் மாவட்ட பொது சுகாதாரத்துறைக்கு தினமும் இணையம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அலுவலர்கள் டாக்டர் ரூபன், சண்முகப்பிரியா நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தெரிவிக்காத மருத்துவமனைகள் மீது பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X