அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவை மீறினாரா உதயநிதி?

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
திருச்சி : 'தலைமைச் செயலகம் பெயரை யாரும் பயன்படுத்த அனுமதியில்லை' என, அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்ட நிலையில், தலைமைச் செயலகம் பெயரில் பத்திரிகையாளர் சங்கம் நடத்துபவர்களிடம், எம்.எல்.ஏ., உதயநிதி, நிதி வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழக செய்தி துறை சார்பில் கடந்த, 4ம் தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு தலைமைச் செயலக பிரஸ் மீடியா என்ற
Udhayanidhi Stalin, Udhayanidhi, MLA, Udhayanidhi

திருச்சி : 'தலைமைச் செயலகம் பெயரை யாரும் பயன்படுத்த அனுமதியில்லை' என, அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்ட நிலையில், தலைமைச் செயலகம் பெயரில் பத்திரிகையாளர் சங்கம் நடத்துபவர்களிடம், எம்.எல்.ஏ., உதயநிதி, நிதி வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக செய்தி துறை சார்பில் கடந்த, 4ம் தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு தலைமைச் செயலக பிரஸ் மீடியா என்ற பத்திரிகையாளர் சங்கம், விதிகளை மீறி, தலைமைச் செயலகம் பெயரையும், அரசின் முத்திரையையும் லட்டர் பேடில் பயன்படுத்தி வருவது தவறு என்றும், அதற்கு விளக்கம் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், 'தமிழக அரசின் முத்திரையையோ, தலைமைச் செயலகம் என்ற பெயரையோ, அதன் தோற்றத்தையோ யாரும் பயன்படுத்த கூடாது' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், நேற்று முன்தினம் உதயநிதி எம்.எல்.ஏ., தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி, 1 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளனர். சங்க நிர்வாகிகளுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார். அதை பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் 'ரீடுவிட்' செய்துள்ளார்.

தலைமைச் செயலகம் என்ற பெயரை பயன்படுத்த கூடாது என அரசு உத்தரவிட்ட சில நாட்களில், தலைமை செயலகம் என்ற பெயருடைய சங்கத்திடம், உதயநிதி கொரோனா நிவாரண நிதி வாங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
10-ஜூன்-202116:54:25 IST Report Abuse
என்றும் இந்தியன் ரூ 1 லட்சத்திற்கான காசோலை அதன் மாநிலத்தலைவர் ஜான் டேவிட் கௌரவத்தலைவர் நிக்கோலஸ் , பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தாங்கள் தலைமைச் செயலகம் அரசு முத்திரை இதை பயன்படுத்த லஞ்சமாக கொடுத்தனர் என்று வந்திருக்க வேண்டும். இதை மறுக்க முடியாது ஏன்னென்றால் பாவாடை சங்கம் இதில் இருப்பதால்
Rate this:
Cancel
Sathish Qatar - Doha,கத்தார்
10-ஜூன்-202116:37:49 IST Report Abuse
Sathish Qatar ஹா ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-ஜூன்-202116:24:53 IST Report Abuse
BASKAR TETCHANA உதயநிதி போகும் இடமெல்லாம் ஏதாவது பிரச்னை வரும். எங்கு போனாலும் பணம் தானே முக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X