இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக நிகழ்கிறது

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.இது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள

சென்னை :இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.latest tamil news


இது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள தளமும், நிலவு, பூமியை சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று, 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு, பூமியை சுற்றி வரும் பாதையில், பூமி-, சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும்.இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழு நிலவு நாளோ ஏற்பட்டால், முறையே சூரிய, சந்திர கிரஹணம் நிகழும்.சூரியனை விட நிலவு மிகவும் சிறியது. இருப்பினும், அது பூமிக்கு அருகில் இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது. நிலவுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவு போல், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 400 மடங்கு அதிகம்.


நீள்வட்ட பாதை

நிலவின் விட்டத்தை விட, சூரியனின் விட்டமும் 400 மடங்கு அதிகம். எனவே தான் சூரியனும், நிலவும் வானில் ஒரே அளவு கொண்டவை போல தோன்றுகின்றன.இதன் காரணமாகவே, முழு சூரிய கிரஹணத்தின்போது சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கிறது. நிலவு, பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது.இதனால் பூமிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு, 3 லட்சத்து, 57 ஆயிரத்து, 200 கி.மீ., முதல், 4 லட்சத்து, 7,100 கி.மீ., வரை மாறுபடுகிறது.வெகு தொலைவில் நிலவு இருக்கும்போது, அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறிதாக இருக்கும்.அப்போது கிரஹணம் நேர்ந்தால், சூரியனை, நிலவால் முழுமையாக மறைக்க இயலாது. சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல தெரியும். இதை, கங்கண சூரிய கிரஹணம் என்கிறோம்.அதுபோன்ற கங்கண சூரிய கிரஹணம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணமாக இன்று நிகழ்கிறது. கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்கு பகுதி, கனடா ஆகிய பகுதிகளில், கங்கண சூரிய கிரஹணத்தை காண முடியும்.


latest tamil news

சில நிமிடங்கள்

பகுதி சூரிய கிரஹணமாக வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகள், ஆசியாவின் வட பகுதிகளில் பார்க்க முடியும்.இந்தியாவை பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; பிற மாநிலங்களில் காண இயலாது.இந்த சூரிய கிரஹணம் இந்திய நேரப்படி மதியம் 1:42க்கு துவங்கி மாலை 6:41 மணிக்கு முடிகிறது. அதிகபட்ச கிரஹணம் 4:11 மணிக்கு நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
10-ஜூன்-202115:33:45 IST Report Abuse
Dr. Suriya "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள்"... ஹா ஹா...ஹா.... பெரியாரை இயங்குவதே பெருமாள் தான்.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202121:35:01 IST Report Abuse
தல புராணம்பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அவாளைப் போல தீட்டு பார்ப்பதில்லை.. ஆனா சங்கரமடத்தில் கருப்பசாமிக்கு என்ன வேலை தருவான்னு உனக்கே தெரியும்.....
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
10-ஜூன்-202109:07:44 IST Report Abuse
Dharma சூரிய, கிரஹணம் இதற்கெல்லாம் தமிழ் வார்த்தைகளை பயன் படுத்தவும். அப்போதுதான் தமிழ் வளரும்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
10-ஜூன்-202107:53:00 IST Report Abuse
கொக்கி குமாரு சூரிய கிரகணம் வரட்டும், போகட்டும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. நம்மை பிடித்த கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் சூரிய கிரகம் எப்போது விலகும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X