அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொன்னதை செய்யுங்கள்: முருகன் வலியுறுத்தல்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை : ''பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குதல், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ., விவசாய அணி சார்பில், முன்கள பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. முக கவசங்களை வழங்கிய பின்
DMK, L Murugan, BJP, Murugan

சென்னை : ''பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குதல், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., விவசாய அணி சார்பில், முன்கள பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. முக கவசங்களை வழங்கிய பின் முருகன் கூறியதாவது:மத்திய அரசின் ஏழு ஆண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்து கூறி வருகிறோம். தமிழகம் முழுதும் உள்ள 12 ஆயிரம் கிராமங்களில், பா.ஜ., சார்பில் இலவச மளிகை பொருட்கள், முக கவசம், கிருமி நாசினி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


latest tamil news



தி.மு.க., தலைமையிலான அரசு அமைந்து 30 நாட்கள் நிறைவடைந்துள்ளன. அக்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியான, பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்னும் துவங்கவில்லை. அத்திட்டத்தையும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும், தி.மு.க., அரசு உடனே துவங்க வேண்டும்.

அரசு நுாலகங்களுக்கு 'முரசொலி' நாளிதழ் வாங்க முடிவு செய்திருப்பது, தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. ஹிந்து சமய அறிநிலையத் துறை, சொத்து ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதில் பாரபட்சம் காட்டக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜூன்-202101:33:07 IST Report Abuse
தமிழவேல் பெட்ரோல் விலைதானே ..... அதுல ரொம்ப பிரச்சனை இருக்குன்னு நிர்மலாம்மாவே சொன்னாங்களே... கொஞ்சம் பொறுக்கக்கூடாதா ?
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
10-ஜூன்-202114:45:51 IST Report Abuse
Ramamurthy N கவலை வேண்டாம், அடுத்த வருடம் பெட்ரோல் விலை குறையும், மாநில தேர்தலுக்கு முன்
Rate this:
Cancel
10-ஜூன்-202114:37:41 IST Report Abuse
Kasi Venkatasubramanian 0.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X