அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லிக்கு கேட்கணுமாம்: காங்., அழகிரி 'காமெடி!'

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை : பெட்ரோல், டீசல், காஸ் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக, தமிழகத்தில் எழுப்பப்படும் கண்டன முழக்கங்கள், டில்லியில் எதிரொலிக்க வேண்டும் என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 11-ல் (நாளை) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று
congress, KS Alagiri, Protest, Fuel Price Hike

சென்னை : பெட்ரோல், டீசல், காஸ் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக, தமிழகத்தில் எழுப்பப்படும் கண்டன முழக்கங்கள், டில்லியில் எதிரொலிக்க வேண்டும் என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 11-ல் (நாளை) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி, மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, எரிபொருட்கள் விலை ஏற்றப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வாயிலாக, 20 லட்சம் கோடி வருவாயை, மத்திய அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருவாயால், மக்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்பட்டுள்ளது.


latest tamil newsஇதை கண்டித்து, வரும், 11ம் தேதி, தமிழகம் முழுதும் பெட்ரோல், விற்பனை நிலையங்கள் முன் போராட்டம் நடைபெறும். இதில், கட்சியினர் அனைவரும் கொரோனா விதிகளின்படி, சமூக விலகலை கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக, தமிழகத்தில் எழுப்பப்படும் கண்டன முழக்கங்கள், டில்லியில் எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
10-ஜூன்-202117:09:33 IST Report Abuse
என்றும் இந்தியன் Here's how prices looked in May 2014 and Feb 2021 for New Delhi: 14 Feb 2021 Base price and freight: May 2014:Rs 47.12:Feb.2021:Rs 32.10 Central taxes:May 2014:Rs 10.39:Feb.2021:Rs 32.90 State taxes:May 2014:Rs 11.90:Feb.2021:Rs 20.61 Dealer commission:May 2014:Rs 2:Feb 2021:Rs 3.68 Retail selling price:May 2014:Rs 71.41:Feb 2021:Rs 89.29 இதை படித்து புரிந்து கொண்டால் உங்கள் கேள்வி யாரை கேட்கவேண்டும் என்று தெரியும் அல்லவா குழந்தைகளே
Rate this:
Cancel
jagadheesan - salem,இந்தியா
10-ஜூன்-202117:02:22 IST Report Abuse
jagadheesan GST குள் பெட்ரோல் விலையை கொண்டு வர வேண்டும் அனால் பிஜேபி செய்யாது. மக்களின் கஷ்டம் தெரிந்தால் தானே செய்வதுற்கு?.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202116:27:23 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டில் கரோனா குறைந்து வருவது இவர் கண்ணை உறுத்துகிறதோ? முதல்வரே சற்று இவரை கவனியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X