பொது செய்தி

இந்தியா

இளம் எழுத்தாளர்களுக்கு உதவித் தொகையுடன் இலக்கிய பயிற்சி திட்டம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 75 பேருக்கு, ஆறு மாதங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க, மத்திய அரசு முன்வந்துள்ளது.இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், சர்வதேச தரத்தில் இலக்கியங்களை படைக்கவும் வழிகாட்டும் வகையில், மத்திய ஊக்கத் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. நாடு, சுதந்திரம் அடைந்து, 75
PM Modi, YUVA scheme, young writers

புதுடில்லி : இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 75 பேருக்கு, ஆறு மாதங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க, மத்திய அரசு முன்வந்துள்ளது.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், சர்வதேச தரத்தில் இலக்கியங்களை படைக்கவும் வழிகாட்டும் வகையில், மத்திய ஊக்கத் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. நாடு, சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆன நிலையில், 30 வயதுக்குட்பட்ட, இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்தும், இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய வளம், மொழி வளம், கலைகள் உள்ளிட்டவற்றை வாசித்தும், அறிந்தும், புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், இந்த திட்டத்தை, பிரதமர் அறிவித்துள்ளார்.


latest tamil news


உலகில் அதிக இளைஞர்களைப் பெற்றிருக்கும் நாட்டில், தற்போதுள்ள சூழலில், இளைஞர்களின் சிந்தனையை மேம்படுத்தி, ஆரோக்கியமான எதிர்காலத்தை திட்டமிடும் வகையில், இது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு, innovateindia.mygov.in/yuva/ என்ற, இணையதள பக்கத்தின் வழியாக விண்ணப்பித்து, அடுத்த மாதத்துக்குள், தங்களின் படைப்புகளை, இளைஞர்கள் பதிவேற்ற வேண்டும்.

தேசிய அளவிலான போட்டியில், தகுதியான, 75 படைப்புகளை, இந்திய அரசின், என்.பி.டி., என்னும் தேசிய புத்தக அறக்கட்டளையின் வல்லுனர் குழு தேர்வு செய்யும். அந்த படைப்புகள், வரும் சுதந்திர தினத்தில், இந்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றப்படும். அடுத்தாண்டு இளைஞர் தினமான, ஜன., 12ல், நுாலாக வெளியிடப்படும். சிறந்த படைப்புகளை எழுதிய, 75 பேருக்கு, மூன்று மாத இலக்கிய பயிற்சியை, தேசிய அளவில் சிறந்த எழுத்தாளர்கள் அளிப்பர்.

மேலும், புத்தகக் கண்காட்சி, மெய்நிகர் புத்தகக் கண்காட்சி, கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும். அத்துடன், ஆறு மாதங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கி, சிறந்த இலக்கியங்களை படைக்கும் வகையில், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். பின், இந்த எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புகள், தேசிய புத்தக நிறுவனத்தின் சார்பில், நுால்களாக்கப்பட்டு, இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும். அந்த புத்தகங்களின் விற்பனையில், 10 சதவீதம் காப்புரிமையாகவும் வழங்கப்படும்.

இந்த திட்டம், 30 வயதுக்குட்பட்ட தமிழ் எழுத்தாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால், அதிகளவில் பங்கேற்று, தமிழின் தொன்மை, தமிழக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்படி, மூத்த எழுத்தாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூன்-202111:48:42 IST Report Abuse
Pugazh V மலேசிய ஐடி க்கு என்ன பிரச்னை?? தமிழர்கள் என்பது என்ன மொபைல் போன் அல்லது ப்ராண்டட் டிரஸ் மாதிரி போலி அசல் நான் ல் எல்லாம் இருக்கிறதா?? மத்திய அரசு ஏதோ புதுசா செய்ய முற்படுகிறது. உடனே எதிர்மறை யை க எழுதி கட்டய போடறீங்க??
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
10-ஜூன்-202108:50:11 IST Report Abuse
siriyaar ஹிட்டலரைப்போல் இன்று இருக்கும் எழுத்தாளர்களை காலி பண்ணினால் நாடு பல பிரச்சினைகளில் இருந்து வெளிப்படும்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
10-ஜூன்-202107:49:50 IST Report Abuse
 N.Purushothaman போலி தமிழர்களும் போராளிகளும் இளையவர்களை ஊக்கப்படுத்த முன் வருவார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X