பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி தட்டுப்பாட்டால் மீண்டும் கோவிட் அலை அபாயம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
மதுரை: தமிழகத்தில் கோவிட் இறப்பு குறையாத நிலையில் நேற்றைய பலி 405. தென்மாவட்டங்களில் 26 பேர் பலியாகினர். தடுப்பூசியைத் தேடி மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் மீண்டும் கோவிட் அலை வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுவரை மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகரில் 2833 பேர் பலியாகினர். மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 374 பேருக்கு சளி பரிசோதனை
CovidVaccine, Shortage, Tamilnadu, தமிழகம், தடுப்பூசி, தட்டுப்பாடு

மதுரை: தமிழகத்தில் கோவிட் இறப்பு குறையாத நிலையில் நேற்றைய பலி 405. தென்மாவட்டங்களில் 26 பேர் பலியாகினர். தடுப்பூசியைத் தேடி மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் மீண்டும் கோவிட் அலை வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகரில் 2833 பேர் பலியாகினர். மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 374 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. புதிதாக ஆர்.டி.பி.சி.ஆர்., மெஷின் நன்கொடையாளர் மூலம் பெறப்பட்டதால் தினசரி சளி பரிசோதனை 12 ஆயிரத்தை தாண்டுகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் 3 லட்சத்து 73 ஆயிரத்து 769 பேர். கடந்த 3 நாட்களாக தடுப்பூசி இல்லாததால் மக்கள் மருத்துவமனைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மேலும் கரும்பூஞ்சை நோய்க்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 75 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நோய்க்கான 'ஆம்போடெர்பின் பி' மருந்துக்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி பற்றாக்குறையுள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் போது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் இருப்பது நல்லது.


latest tamil news




அன்று வீணாக்கினோம்; இன்று தேடி தவிக்கிறோம்



கோவிட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு, கரும்பூஞ்சை மருந்துக்கு தட்டுப்பாடு என தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தினசரி இறப்பும் 400-ஐ தாண்டுகிறது. நேற்றைய மொத்த இறப்பு 405. தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டால் கோவிட் பாதிப்பு வந்தாலும் உயிரை காக்கும். மிக லேசான பாதிப்பு தான் ஏற்படும். தடுப்பூசி தமிழகத்திற்கு தாராளமாக கிடைத்த போது சமூகவிரோதிகள் அதற்கு எதிராக சமூக வலைதளங்களில் விஷம பிரசாரம் செய்து மக்களிடம் பீதியை ஏற்படுத்தினர்.


latest tamil news



இந்தியாவில் அதிகளவில் தடுப்பூசிகளை வீணாக்கிய மாநிலங்களில் தமிழகமும் முன்னணியில் இருந்தது. மார்ச் கடைசி வரை 12 சதவீத தடுப்பூசிகளை வீணாக்கியுள்ளோம். மருந்து பாட்டிலை ஒரு முறை திறந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிலுள்ள மருந்தை 10 பேருக்கு செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மருந்தின் வீரியம் வீணாகிவிடும். பெருமளவு மருந்து பாட்டில்களை வீணாக்கி விட்டோம்.

ஏப்ரல் துவக்கத்தில் இருந்து தடுப்பூசி தான் உயிரை காக்கும் என்பதை மக்கள் தாமதமாக புரிந்து கொண்டனர். இப்போது மக்கள் தயாராக உள்ளனர். தடுப்பூசிக்கு பற்றாக்குறையாக உள்ளது. முன்பு ஒரு பாட்டிலில் உள்ள மருந்தை 10 பேருக்கு செலுத்திய நிலையில் தற்போது 11 பேருக்கு செலுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களின் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். நிதியைப் பெறுவதிலும் தடுப்பூசியை பெறுவதிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி மத்திய அரசிடம் இணக்கமாக செல்ல வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-ஜூன்-202113:11:34 IST Report Abuse
Ramesh Sargam மீண்டும் தட்டுப்பாடா...? அமெரிக்கா கொடுக்கிறது. உலக சுகாதார மையம் கொடுக்கிறது. மேலும் பல நாடுகள் கொடுத்தும், ஏன் இந்த தட்டுப்பாடு? கிடைக்கப்பெறும் தடுப்பூசிகள், போய்சேரவேண்டிய இடத்திற்கு செல்வதில்லையா, இல்லை மக்களுக்கு போடாமல் வீணடிக்க படுகிறதா? அல்லது கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகிறதா...?
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
10-ஜூன்-202112:49:59 IST Report Abuse
அறவோன் ஊசிக்கு விடையில்லை வடைதான் எங்கும் வியாபித்திருக்கிறது
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
10-ஜூன்-202112:47:34 IST Report Abuse
அறவோன் சற்றொப்ப ₹ 700 கோடிகள் ஏழாண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X