நீங்கள் அப்படி கூறுவதால் மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை...

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
மத்திய அரசு என்பதற்கு பதிலாக, ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்து தவறான கருத்து, சிலரால் பரப்பப்படுவதால், இனிமேல் நம் சொல்லாக்கத்தில், இந்திய ஒன்றிய அரசு என்றே இருக்கும். அதுபோல தமிழ்நாடு என்றே பயன்படுத்தப்படும்.- திராவிடர் கழக தலைவர் வீரமணி'நீங்கள் அப்படி கூறுவதால், மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் எந்த பாதிப்பும், மாற்றமும் வந்து விடப் போவதில்லை...' என,
நீங்கள் அப்படி கூறுவதால் மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை...

மத்திய அரசு என்பதற்கு பதிலாக, ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்து தவறான கருத்து, சிலரால் பரப்பப்படுவதால், இனிமேல் நம் சொல்லாக்கத்தில், இந்திய ஒன்றிய அரசு என்றே இருக்கும். அதுபோல தமிழ்நாடு என்றே பயன்படுத்தப்படும்.
- திராவிடர் கழக தலைவர் வீரமணி


'நீங்கள் அப்படி கூறுவதால், மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் எந்த பாதிப்பும், மாற்றமும் வந்து விடப் போவதில்லை...' என, கூறத் துாண்டும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை.'மேட்ரிமோனியல்' விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் மணமகனை தேடும் பெண், 'கோவிஷீல்ட்' முதல் 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளதாக, தன் விபரங்களில் தெரிவித்து உள்ளார். எதிர்காலத்தில் இப்படித் தான் நம் வாழ்க்கை முறை இருக்கும்.
- திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர்


'அந்த அளவுக்கு தடுப்பூசிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உங்கள் தலைவர், விதண்டாவாதம் பேசி வருகிறார்...' என, கூறத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர் அறிக்கை.வரும் 21 முதல், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மத்திய அரசு தடுப்பூசி போடப் போகிறது. இந்த திட்டம், ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் தடுப்பூசி போடப்படுவது போன்ற மெகா திட்டமாக இருக்கும்.
- தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை


latest tamil news
'மக்கள் தொகை அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசிக்கு எதிர்ப்பும் கிடையாது; தட்டுப்பாடும் இல்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை அறிக்கை.தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என, பிரதமர் மோடி சொல்கிறார். பிறகு ஏன் தனியார் மருத்துவமனைகளில் பணம் வாங்குகின்றனர் எனக் கேட்டுள்ளார். அவரின் நிலை கண்டு வருத்தம் தான் அடைய வேண்டியுள்ளது.
- கர்நாடக பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா


'விபரம் புரியாமல், துடுக்குத்தனமாக பேசுவதால் தானே, அவரை, 'பப்பு' என்கின்றனர், வட மாநிலங்களில்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கர்நாடக பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிக்கை.அரசு வேலைவாய்ப்பில், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, எம்.ஜி.ஆர்., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, முந்தைய, இ.பி.எஸ்., ஆட்சி நிறுத்தி வைத்துள்ளது. அதை, தி.மு.க., அரசு செயல்படுத்த வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்


'இது உங்கள் ஆட்சி. நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். எனவே, கவலைப்படாதீர்கள். கண்டிப்பாக, இரண்டொரு நாட்களில் உத்தரவு வந்து விடும். சரி, அரசுக்கு ஆள் எடுக்கும் நிலையிலா அரசு உள்ளது...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
10-ஜூன்-202121:11:46 IST Report Abuse
Narayanan ஒரு கட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்த நேரத்தில் ஒருவசனம் பேசினார் . மாற்றவேண்டும் எல்லாத்தையும் மாற்றவேண்டும் என்று சொன்னார் . இது எல்லோருக்கும் நினைவில் இருக்கும் . அது இந்த அரசுக்கு நன்றாக மனதில் பதிந்து விட்டது . அதனால் எல்லா அதிகாரிகளையும் மாற்றிகொண்டே இருக்கிறார்கள்.எந்த அதிகாரிக்கும் தான் இன்று இருக்கும் பதவி அல்லது ஊர் நாளை இருக்குமா என்று தெரியாத நிலை .வெட்கம் .
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-202120:27:29 IST Report Abuse
Rajagopal ஒன் என்பது ஒன்றைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை. இவர்கள் ஆங்கிலேய அடிமைகள். அதனால் "ஒன்"றியம் என்று கூவுகிறார்கள். எதிர்காலத்தில் தனி நாடு கேட்டு போராட்டம் துவங்க இது முதல் படி. இதில் சீமான், மணியரசன், திமுக, கிறித்துவ மத மாற்ற இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் ஒன்றாக செயல் படும். பிறகு பங்காளி சண்டை போட்டுக்கொள்வார்கள். இது நடக்கும் முன்னால், இந்த மாநிலத்தை, தொண்டை நாடு, கொங்கு நாடு, பாண்டிய நாடு என்று பிரித்து விட வேண்டும். வரலாற்றில் பாண்டியர்கள், சிங்களவர்களோடு சேர்ந்து சோழர்களை எதிர்த்து போராடினார்கள். தமிழினம் மொத்தமும் சிங்களவர்களுக்கு எதிரிகளாக இருந்ததில்லை. தொண்டை நாட்டில் வலிமை பெற்றுள்ள ஆந்திராவிட கட்சியினர் பலர் இலங்கையில் பெரிய முதலீடு செய்து வைத்துள்ளார்கள். இப்போது சீனா உள்ளே வந்துவிட்டது என்று நடுங்குகிறார்கள். நமது பாரதம் என்றும் ஒன்றாக வலிமையோடு இருக்க, தமிழ் நாட்டை மூன்றாக பிரித்தால் மட்டுமே விடியும்.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
10-ஜூன்-202119:16:29 IST Report Abuse
dina அரசு வேலைவாய்ப்பில், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,தடுப்பூசி போடாத மக்களே யில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் குரல் கொடுப்பாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X