சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை கை விரல் துண்டிப்பு இயக்குனர் பதிலளிக்க உத்தரவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை : தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்; விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி பிரசவத்துக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில்

சென்னை : தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்; விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி பிரசவத்துக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 25ம் தேதி அவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாய்பால் ஊட்டக்கூடாது என்பதால் குழந்தையின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த மருந்து ஏற்றும் 'வென்பிளான்' சாதனம் வாயிலாக திரவ உணவு வழங்கப்பட்டு வந்தது.உடல்நலம் பெற்ற குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்போது குழந்தையின் இடது கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியை நர்ஸ் கத்திரிகோலால் வெட்டியுள்ளார். இதில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக குழந்தையின் விரல் மீண்டும் தையல் போட்டு சேர்க்கப்பட்டது.நர்சின் அலட்சியம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா என்பது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் சம்பவம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க டி.எம்.இ. எனப்படும் மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X