கோவிட் முன்கள பணியில் ரோபோ: ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஹாங்காங்: கோவிட் நோயாளிகளைக் கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோவுக்கு அவர்கள் 'கிரேஸ்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.

ஹாங்காங்: கோவிட் நோயாளிகளைக் கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.



latest tamil news



ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோவுக்கு அவர்கள் 'கிரேஸ்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏஐ) மூலம் நோயாளிகளின் பிரச்னைகளை எளிதில் கண்டறிகிறது.


latest tamil news



குறிப்பாக, முதியவர்கள், கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
10-ஜூன்-202122:10:31 IST Report Abuse
spr நான் நம் நாட்டிலேயே பல கண்டுபிடிப்புக்களை செய்தித்தாள்கள் 2020 வருடமே வெளியிட்டன அதனை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை.இந்நேரம் அவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து பணம் ஈட்டியிருக்கலாம் அதா விட்டு பலருக்கு வாழ்வாதாரம் போச்சு என்று புலம்புவதில் பயன் என்ன?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
10-ஜூன்-202117:49:25 IST Report Abuse
spr புதிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் மோடி முதல் நீதிபதிகள் உட்பட எந்த ஒரு தலைவரும் இது குறித்தெல்லாம் சிந்திக்கவில்லையே
Rate this:
sivan - seyyur,இந்தியா
10-ஜூன்-202122:29:52 IST Report Abuse
sivan ஏதெதுக்குத்தான் பிரதமரையும் நீதிபதியையும் இழுக்கறதுன்னே இல்லையா? செய்தியை ஒழுங்க்காக படியுங்கள்.. காலை எழுந்தவுடன் ... மோடி மோடி என்று நம் பிரதமரை பற்றியே சிந்தித்தது கொண்டிருந்தால் .. இப்படித்தான் ஏடாகூடமாக சிந்திக்க தோன்றும்.. ஹாங் காங் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஹாங் ஹாக்கிங் அதிபரே நீதிபதியோ கண்டுபிடிக்கவில்லை. இது போல கண்டு பிடிப்புகளை நம் நாட்டு விஞ்ஞானிகள்தான் / ஆராய்ச்சி படிக்கும் இளைஞர்கள் கண்டுபிடிக்க வேண்டும் யோசித்து கருத்து எழுங்கள்....
Rate this:
Cancel
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
10-ஜூன்-202116:45:25 IST Report Abuse
என்றும் இந்தியன் மனிதன் என்பவன் மிருகமாகலாம் என்பதை "ரோபோ என்பது மனிதனாகலாம், மனிதன் பணியை அத்தனையும் செய்யலாம்" என்று பாடல் வரிகள் இப்போது மாற்றப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X