சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி வியாபாரம்: 4 ஜவுளி கடைகளுக்கு 'சீல்'

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தடையை மீறி விற்பனையில் ஈடுபட்ட நான்கு ஜவுளி கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையத் அபுதாகிர் தலைமையிலான வருவாய்த்துறையினர் கடை வீதிகளில் சோதனை மேற்கொண்டனர்.வடலுாரில் விருத்தாச்சலம் சாலையில் உள்ள 2 பிரபல ஜவுளிக் கடைகளில் பின் பக்கமாக திறந்து வியாபாரம் செய்து
 தடையை மீறி வியாபாரம்: 4 ஜவுளி கடைகளுக்கு 'சீல்'

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தடையை மீறி விற்பனையில் ஈடுபட்ட நான்கு ஜவுளி கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையத் அபுதாகிர் தலைமையிலான வருவாய்த்துறையினர் கடை வீதிகளில் சோதனை மேற்கொண்டனர்.வடலுாரில் விருத்தாச்சலம் சாலையில் உள்ள 2 பிரபல ஜவுளிக் கடைகளில் பின் பக்கமாக திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். கடையில் அதிகளவில் பொதுமக்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் துணிகள் வாங்கிக் கொண்டிருந்தனர்.இதையடுத்து பொது மக்களை வெளியேற்றி 2 ஜவுளிக் கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

இதே போல், பெண்ணாடம் பேரூராட்சி, தேரடி வீதியில் இயங்கிய 2 ஜவுளிக்கடைகள் நேற்று திறக்கப்பட்டு, விற்பனை நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி, இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் குழுவினர் 2 ஜவுளி கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர். அப்போது கடை உரிமையாளர் பேரூராட்சி அதிகாரி மற்றும் போலீசாரிடம் கதறி அழுது, இனிமேல் கடையை திறக்கமாட்டேன் எனக்கூறி மன்னிப்பு கேட்டார்.

ஆனாலும் பேரூராட்சி ஊழியர்கள் கடைக்கு 'சீல்' வைத்தனர்.பின், கடைவீதி பகுதியில் உத்தரவை மீறி திறந்திருந்த நகை அடகு கடை, கவரிங் கடை உட்பட 18 கடைகளுக்கு தலா ரூ, 200 அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X