சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் தோட்டா வீசி மீன் பிடிக்கும் கும்பல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மேட்டூர் : காவிரி ஆற்றில் தோட்டா வீசி ஒரு கும்பல் மீன் பிடிப்பதால், நடவடிக்கை எடுக்க, கரையோர கிராம மக்கள் வலியுறுத்தினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடிவாரம் முதல், அங்கிருந்து, 10 கி.மீ., துாரமுள்ள செக்கானுார் கதவணை வரை, மின் உற்பத்திக்கு காவிரியில், 0.45 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்படும். கடந்த, 25ல் கதவணை பராமரிப்பு பணி தொடங்கியது. இதற்காக, தேக்கி வைத்த தண்ணீர், கீழ்

மேட்டூர் : காவிரி ஆற்றில் தோட்டா வீசி ஒரு கும்பல் மீன் பிடிப்பதால், நடவடிக்கை எடுக்க, கரையோர கிராம மக்கள் வலியுறுத்தினர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடிவாரம் முதல், அங்கிருந்து, 10 கி.மீ., துாரமுள்ள செக்கானுார் கதவணை வரை, மின் உற்பத்திக்கு காவிரியில், 0.45 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்படும். கடந்த, 25ல் கதவணை பராமரிப்பு பணி தொடங்கியது. இதற்காக, தேக்கி வைத்த தண்ணீர், கீழ் பகுதியில் வெளியேற்றப்பட்டது.

இதனால், காவிரி ஆற்றில் ஆங்காங்கே சிறு, சிறு குட்டைகளாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த குட்டைகளில் மீன்கள் அதிகளவில் காணப்படும். மீன்பிடிக்கும் ஒரு கும்பல், குட்டையில் தோட்டாவை வீசுகின்றனர். தோட்டா வெடிக்கும் போது, மீன்கள் மயங்கி கூட்டமாக மேற்பரப்பில் மிதக்கும். அந்த மீன்களை மொத்தமாக பிடித்து கும்பல் விற்கிறது.

இதனால், கரையோரம் உள்ள கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி கிராம மக்கள், தோட்டா வீசி மீன் பிடிப்பவர்கள், அவர்களுக்கு தோட்டா வினியோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X