சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் சில்மிஷம் : சகோதரர்கள் மீது 'போக்சோ' வழக்கு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : முன்விரோத தகராறில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ய முயன்றதாக சகோதரர்கள் மீது போலீசார் 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த பூசாரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி அஞ்சாயிரம், 40; இவருக்கும், அமிர்தலிங்கம் சகோதரர் சேகர் மகன்கள் பாலு, 29; மற்றும் பாரதிராஜா, 27; ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.இது தொடர்பாக

விழுப்புரம் : முன்விரோத தகராறில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ய முயன்றதாக சகோதரர்கள் மீது போலீசார் 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த பூசாரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி அஞ்சாயிரம், 40; இவருக்கும், அமிர்தலிங்கம் சகோதரர் சேகர் மகன்கள் பாலு, 29; மற்றும் பாரதிராஜா, 27; ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லுார் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி அஞ்சாயிரம் வீட்டில், யாரும் இல்லாதபோது, பாலு, பாரதிராஜா ஆகியோர் அத்துமீறி நுழைந்து, அவரது 17 வயது மகளிடம் சில்மிஷம் செய்ய முயன்றனர். மேலும், இதை வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக புகாரின் பேரில், பாலு, பாரதிராஜா ஆகியோர் மீது 'போக்சோ' சட்டத்தில் விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X