பொது செய்தி

இந்தியா

ஆன்லைனில் 5 லட்சம் பேரிடம் ரூ.150 கோடி மோசடி; டில்லியில் 11 பேர் கைது

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஆன்லைன் லோன் ஆப் மூலம் இரண்டு மாதங்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 11 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லி துணை போலீஸ் கமிஷனர் (சைபர் செல்) அனீஷ் ராய் தெரிவித்துள்ளதாவது: 'பவர் பேங்க்' மற்றும் ஈ.இசட்.பிளான் (Power Bank and EZPlan) ஆகிய இரண்டு மொபைல் ஆப்கள் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு புகார்கள்

புதுடில்லி: ஆன்லைன் லோன் ஆப் மூலம் இரண்டு மாதங்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 11 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.latest tamil newsடில்லி துணை போலீஸ் கமிஷனர் (சைபர் செல்) அனீஷ் ராய் தெரிவித்துள்ளதாவது: 'பவர் பேங்க்' மற்றும் ஈ.இசட்.பிளான் (Power Bank and EZPlan) ஆகிய இரண்டு மொபைல் ஆப்கள் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றை நாங்கள் கண்காணிக்கத் துவங்கினோம்.

பவர் பேங்க் பெங்களூருவை தளமாகக் கொண்டது. ஆனால் அதன் சேவையகம் சீனாவை மையமாகக் கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த ஆன்லைன் ஆப், மக்களை அதில் அதிக பணம் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு, ஆரம்பத்தில் முதலீடு செய்த பணத்தில், 5 முதல் 10 சதவீதம் வரை ஒரு சிறிய தொகையை திரும்பக் கொடுத்துள்ளது.

இதையடுத்து அதை நம்பிய 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ரூ.150 கோடிக்கு மேல் அதில் முதலீடு செய்துள்ளனர். நாங்கள் அதில் ஒரு தொகையை முதலீடு செய்து பண மோசடியைக் கண்டறிந்தோம்.


latest tamil news


வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை ஆய்வு செய்ததில், ஜூன் 2ம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை செய்ததில், மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.பொது மக்கள் ஆன்லைன் லோன் ஆப் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏமாற்றப்பட்டால் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
10-ஜூன்-202121:51:31 IST Report Abuse
Nalam Virumbi ஏமாந்ததுல ஈரோடு காரங்க நிறைய இருப்பார்களே
Rate this:
Cancel
10-ஜூன்-202116:50:50 IST Report Abuse
Saikumar C Krishna இ. இசட். பிளான் இல்ல அது. இசி பிளான்.
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
10-ஜூன்-202123:01:43 IST Report Abuse
iconoclastபாதி british english மீதி American english...
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
10-ஜூன்-202114:25:24 IST Report Abuse
Dr. Suriya மேற்கு வணக்கம்... சாரதா மோசடி...நியாபகம் இருக்கா மக்களே....அதோட நீட்சியாகத்தான் இருக்கும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X