அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 நுழைவுத்தேர்வு விவகாரம் : இரட்டை வேடம் கூடாது: ராமதாஸ்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை : 'பிளஸ் 1 நுழைவுத்தேர்வு விவகாரத்தில், அரசு இரட்டை வேடம் போடக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில், மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.அதில், பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்

சென்னை : 'பிளஸ் 1 நுழைவுத்தேர்வு விவகாரத்தில், அரசு இரட்டை வேடம் போடக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில், மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.அதில், பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வி கமிஷனர் அறிவித்திருக்கிறார். இது, சமூக நீதிக்கு எதிரானது.

'எந்தப் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான், தி.மு.க.,வின் நிலைப்பாடு' என, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவிக்கிறது;

ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

கல்லுாரி படிப்புக்கே நுழைவுத்தேர்வு கூடாது என்ற நிலையில், பள்ளிப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, தவறான முன்னுதாரணத்தை, தமிழக அரசு ஏற்படுத்தி விடக் கூடாது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்புக்கு, கடந்த ஆண்டு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதோ, அதேபோல நடப்பாண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X