பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 9 லட்சம் டன் அரிசி இலவசமாக கிடைக்கும்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை : 'இலவச உணவு தானியங்கள், வரும் தீபாவளி வரை வழங்கப்படும்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால், தமிழகத்திற்கு, மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக இன்னும் 9 லட்சம் டன் அளவிற்கு அரிசி இலவசமாக கிடைக்க உள்ளது.கொரோனா பரவலை தடுக்க 2020 மார்ச் இறுதியில், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் பாதித்ததால், ஏப்., முதல் நவ., வரை, முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன்

சென்னை : 'இலவச உணவு தானியங்கள், வரும் தீபாவளி வரை வழங்கப்படும்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால், தமிழகத்திற்கு, மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக இன்னும் 9 லட்சம் டன் அளவிற்கு அரிசி இலவசமாக கிடைக்க உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க 2020 மார்ச் இறுதியில், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் பாதித்ததால், ஏப்., முதல் நவ., வரை, முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரருக்கு, ஏற்கனவே வழங்குவதுடன் கார்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.அதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, ஏப்., முதல் நவ., வரை 13.91 லட்சம் டன் அரிசி வழங்கப்பட்டது.

தமிழக அரசு, முன்னுரிமை, அந்தியோதயா பிரிவுகளுடன், முன்னுரிமையற்ற கார்டுதாரர்களையும் சேர்த்து 2.06 கோடி கார்டுதாரர்களுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கியது.முன்னுரிமையற்ற பிரிவுக்கு கூடுதலாக வழங்கிய அரிசியை, தமிழக அரசு, சொந்த செலவில் வாங்கியது. இதற்காக, மாதம் 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டது.

நடப்பாண்டு ஏப்., முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.இதனால், மே, ஜூனில், ஏற்கனவே வழங்கியது போல் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு 3.60 லட்சம் டன் அரிசி ஒதுக்கப்பட்டு, பெறப்பட்டுள்ளது. ஜூன் மாத அரிசி, தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில், மே மாத அரிசி, அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ரேஷனில் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை, பிரதமர் மோடி, வரும் தீபாவளி வரை நீட்டித்து அறிவித்துள்ளார். இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, ஜூலை முதல் நவ., வரை கூடுதலாக 9 லட்சம் டன் அரிசி இலவசமாக கிடைக்க உள்ளது.ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முன்னுரிமையற்ற பிரிவுக்கும் சேர்த்து, கூடுதல் அரிசி வழங்க இருப்பதற்காக, தமிழக அரசுக்கு ஆறு மாதங்களுக்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

6 லட்சம் டன்!

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரருக்கு மாதம்தோறும் வழக்கமாக வழங்க 3.30 லட்சம் அரிசி தேவை. மத்திய அரசின் கூடுதல் அரிசியால், தற்போது, ரேஷனில் வழங்கப்படும் அரிசியின் அளவு 6 லட்சம் டன்னை தாண்டி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X