பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சிகளுக்கு பலம் இல்லை : விவசாய சங்க தலைவர் கவலை

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
லக்னோ: நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக பாரதிய கிசான் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறி உள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், ஆறு மாதங்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இதுவரை, 11 சுற்று பேச்சு நடந்துள்ளது. கடைசியாக ஜன., 22ல்
எதிர்க்கட்சிகள், விவசாய சங்க தலைவர், ராகேஷ் திகாயத், வேளாண் சட்டம், மம்தா, மம்தா பானர்ஜி, முதல்வர் மம்தா,

லக்னோ: நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக பாரதிய கிசான் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறி உள்ளார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், ஆறு மாதங்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இதுவரை, 11 சுற்று பேச்சு நடந்துள்ளது. கடைசியாக ஜன., 22ல் பேச்சு நடந்தது.


latest tamil newsதங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை, விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று சந்தித்தனர். பாரதிய கிசான் சங்க தலைவர்கள் ராகேஷ் திகாயத், யுத்விர் சிங் உள்ளிட்டோர், கோல்கட்டாவில் மம்தாவை சந்தித்து, தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக, பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் பலமாக இருந்திருந்தால், நாங்கள் தெருவில் அமர்ந்து போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. எதிர்க்கட்சிகள் பலமாக இருக்க வேண்டும் என நாங்கள் மே.வங்க முதல்வர் மம்தாவிடம் கூறியுள்ளோம்.

நான் முதல்வரை தான் சந்தித்தேன். கட்சி தலைவரை சந்திக்கவில்லை. நான், அதற்கு அனுமதி கேட்பதற்கு ஆப்கன் அதிபரையா சந்தித்தேன்? முதல்வரை சந்திக்க விசா தேவைப்படுமா? அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திப்போம். உத்தர்கண்டில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அவர்களையும் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kishore Kumar Chari - chennai,இந்தியா
11-ஜூன்-202106:04:03 IST Report Abuse
Kishore Kumar Chari these agricultures people are not really on ground people and totally brokers and intermediate agents . Please all real agriculturist wake up and form your own team and represent government for good benefits . Do not trust existing people who are still doing strike and sitting and eating your money
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
10-ஜூன்-202123:03:46 IST Report Abuse
bal இவனே காசு கொடுத்து வெறும் ஒன்பது ஆயிரம் வோட்டு வாங்கியவன்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
10-ஜூன்-202122:11:54 IST Report Abuse
M  Ramachandran கூடி கும்மி அடிச்சது போனதும் என்று இப்பொஅ தான் தெரிகிறாதா. ராவூலை நம்பி இறஙகிநீர் கல். அந்த ஆள் உங்களை அம்போ என்று விட்டு விட்டு வேறு கிளைக்கு தாவி விட்டார்.அவருக்கு அரசியல் ஒரு பொழுது போர்க்கு. யாராவது எழுதிக்கொடுத்தாத உளறி விட்டு போட்ட கொண்டேனா இருப்பார். உங்கள் நிலை தான் பாவம் பரிதாப நிலை. இப்போ வெளியிலிருந்து பணம் வருவது வேகு வாக குறைந்த விட்டது வெய்யில் காலம் எவ்வளவு நேரம் தான் ஏசி யில் உட்க்கார்ந்திருப்பது.பரிதாபம். அன்கு இருந்தாலும் கமிஸ்ஸின் மண்டி பொஅலுப்பு நடக்கும்.அந்த வருமானமும் கொஅவிந்தா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X