எதிர்க்கட்சிகளுக்கு பலம் இல்லை : விவசாய சங்க தலைவர் கவலை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சிகளுக்கு பலம் இல்லை : விவசாய சங்க தலைவர் கவலை

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (42)
Share
லக்னோ: நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக பாரதிய கிசான் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறி உள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், ஆறு மாதங்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இதுவரை, 11 சுற்று பேச்சு நடந்துள்ளது. கடைசியாக ஜன., 22ல்
எதிர்க்கட்சிகள், விவசாய சங்க தலைவர், ராகேஷ் திகாயத், வேளாண் சட்டம், மம்தா, மம்தா பானர்ஜி, முதல்வர் மம்தா,

லக்னோ: நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக பாரதிய கிசான் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறி உள்ளார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், ஆறு மாதங்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இதுவரை, 11 சுற்று பேச்சு நடந்துள்ளது. கடைசியாக ஜன., 22ல் பேச்சு நடந்தது.


latest tamil news



தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை, விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று சந்தித்தனர். பாரதிய கிசான் சங்க தலைவர்கள் ராகேஷ் திகாயத், யுத்விர் சிங் உள்ளிட்டோர், கோல்கட்டாவில் மம்தாவை சந்தித்து, தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக, பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் பலமாக இருந்திருந்தால், நாங்கள் தெருவில் அமர்ந்து போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. எதிர்க்கட்சிகள் பலமாக இருக்க வேண்டும் என நாங்கள் மே.வங்க முதல்வர் மம்தாவிடம் கூறியுள்ளோம்.

நான் முதல்வரை தான் சந்தித்தேன். கட்சி தலைவரை சந்திக்கவில்லை. நான், அதற்கு அனுமதி கேட்பதற்கு ஆப்கன் அதிபரையா சந்தித்தேன்? முதல்வரை சந்திக்க விசா தேவைப்படுமா? அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திப்போம். உத்தர்கண்டில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அவர்களையும் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X