பொது செய்தி

இந்தியா

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அவசியமில்லை: மத்திய அரசு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான புதிய கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற
Govt Issues, Guidelines, Covid Children, Mask, Remdesivir, குழந்தைகள், கோவிட், மாஸ்க், முகக்கவசம், ரெம்டெசிவிர்

புதுடில்லி: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான புதிய கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கப்படவில்லை. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிரின் பயன்பாடு பாதுகாப்பானது என்பது தொடர்பாக எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. அறிகுறி இல்லாத அல்லது கோவிட் பாதிப்பு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்படக் கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.


latest tamil news


மேலும், 5 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், முகக்கவசம் அணியலாம். 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் சரியான முறையில், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம் அணியலாம். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டப்படுத்தும் அளவில் மட்டுமே சி.டி ஸ்கேன்களை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R SRIDHAR - Coimbatore,இந்தியா
10-ஜூன்-202118:01:22 IST Report Abuse
R SRIDHAR முதலில் நாம் எப்படி சுவாசிக்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும், மூச்சை வெளியே விடும்போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியே விட்டு ஆக்ஸிஜனை உள்ளேயே இழுப்போம், இந்த மாஸ் போடுவதின் மூலம் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விட்டுவிட்டு திரும்ப ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் இந்த மாஸ்கால் தடுக்கப்பட்டு விடுகிறது, ஆகவே கார்பன் டையாக்சைடையே சுவாசிக்கும்போது மேலும் பல நோய்களா இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது இது டாக்டர்கள் தெரிந்த உண்மை.... ஆனால் இந்த சூழ்நிலை இதை அவர்கள் சொல்ல முடியாது என்பதால் அடக்கி வாசிக்கிறார்கள், இதை எல்லோரும் புரிந்துகொண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு உஷாராக இருக்கவேண்டும் ஜாக்கிரதை
Rate this:
agni - chennai,இந்தியா
10-ஜூன்-202118:52:57 IST Report Abuse
agniஉண்மைதான்.ஆனால் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதால் தெரியாம ஒரு குழந்தைகளுக்கு வேறு விதத்தில் தொற்று பாதிப்பு வந்தா அதுக்கும் மத்திய அரசு பழி போட இன்றே தயாராகி இருப்பார்கள் எதிர் கட்சிகள்....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஜூன்-202103:03:58 IST Report Abuse
தல புராணம்அட சனாதன விஞ்ஞானிகளே, மாஸ்க் என்ன பிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்டு மூஞ்சியிலே ஒட்டப்பட்டிருக்குதா என்ன ?? காத்து போகாம வெளிக்காற்று அங்கேயே நிக்க ? மாஸ்க் போடுவது எதிரில் பேசுறவங்க தெறிக்கவிடும் எச்சில் திவலைகளில் இருந்தும், காற்றில் இருக்கும் திவலைகளில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள. இரண்டு அடுக்காக இருக்க வேண்டும் என்பதும் அதற்குத் தான்.. துணி மற்றும் பேப்பர் மூலப்பொருளாக கொண்டு செய்யப்பட்ட முகக்கவசங்கள் எந்த வகையிலும் காற்றை முழுதுமாக தடை செய்து விடுவதில்லை.. உள்ளே இழுக்கும் போது சரி, வெளியே விடும் போதும் சரி.. நீ சொல்றதை பாத்தா, ஆண்டாண்டுகாலமாக அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்கள் எல்லாம் எப்பவோ செத்து விழுந்திருப்பாங்களே.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஜூன்-202103:05:00 IST Report Abuse
தல புராணம்ஏன் கோயம்புத்தூரில் கொரோனா பரவல் அதிகமா இருக்குன்னு இப்ப தெரியுதா.. இவனை மாரீ விஞ்ஞானிங்கோ அங்கே ஏராளம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X