சமூக பரவலில் 'டெல்டா' வைரஸ் முன்னிலை; சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கவலை

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் பரவி வரும் கோவிட் வகைகளில், இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் வைரஸ் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, சமூகப் பரவல் மூலம் 449 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில், டெல்டா

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் பரவி வரும் கோவிட் வகைகளில், இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் வைரஸ் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, சமூகப் பரவல் மூலம் 449 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில், டெல்டா வகை கோவிட் வைரஸ் தாக்கம், 428 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 9 பேருக்கு பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட பீட்டா வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்தது.


latest tamil news



இதன்மூலம் சிங்கப்பூரில் டெல்டா வகை வைரசின் தீவிர பரவல் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் முதல்முறையாக டெல்டா வகை வைரஸ் கடந்த மாதத் தொடக்கத்தில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அதன் பரவல் மிகத் தீவிரமாகவுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மட்டுமன்றி, பிரிட்டனிலும் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-202120:31:29 IST Report Abuse
oce தெரு ஊர் நாடு சுற்றுபவர்களால் உலகம் பூராவும் குரோனா பரவலுடன் குரோனாவிலிருந்து பிறந்த வைரஸ்கள் உருமாறி தாக்குகின்றன
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202116:32:19 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவில் என்ன நடந்தாலும் பாதிக்கப்படுவது சிங்கப்பூர். எனவே கவலை கொள்வது இயற்கைதானே?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202121:19:24 IST Report Abuse
தல புராணம்கும்பமேளா கங்கா டெல்டா வைரஸை இங்கேருந்து சிங்கப்பூருக்கு பரப்பி விட்ட இவரு தான்.....
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
10-ஜூன்-202114:44:21 IST Report Abuse
raghavan படத்துல எல்லோருமே ஒழுங்காக முககவசம் போட்டிருக்காங்க..நம் நாட்டில் சட்டமே போட்டாலும்..நீ என்ன சொல்றது நான் என்ன கேக்றது என்ற மனப்போக்கு தான். பள்ளிப்பருவத்திலேயே அந்த ஒழுக்கத்தை கற்பிக்கணும். பாடமெல்லாம் அடுத்ததுதான்.
Rate this:
blocked user - blocked,மயோட்
10-ஜூன்-202115:07:25 IST Report Abuse
blocked userவீம்பு செய்தால் அன்றே நீதிமன்றத்தில் நிறுத்தி $8000 வெள்ளி அபதாரம். சமூக இடைவெளியை உறுதி செய்ய ஆங்காங்கு அலுவலர்கள் / தன்னார்வலர்கள் உண்டு. பேருந்துகளிலும் அருகருகில் இருந்தாலும் பேச கட்டுப்பாடு உண்டு (வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்) - பேசினால் பதாதைகளை வைத்து அறிவுறுத்துவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X