பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை வரும் 14ல் துவக்கம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14 முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.கொரோனாவால் இந்தாண்டும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வரும், 14 முதல் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுய நிதி பள்ளிகள்

ஈரோடு: பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14 முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.
கொரோனாவால் இந்தாண்டும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வரும், 14 முதல் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுய நிதி பள்ளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவை வழங்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல், 10 முதல், 15 சதவீதம் வரை மாணவர்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம். ஒரே பாடப்பிரிவை அதிகளவில் மாணவர்கள் கோரும் பட்சத்தில் கீழ்நிலை பாடத்தில், 50 வினாக்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் மூலம் வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்தி மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பிளஸ் 1 வகுப்புகளை ஜூன் மூன்றாவது வாரத்தில் கொரோனா தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் துவங்கலாம் என, பள்ளி கல்வி துறை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம், தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X