பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் மண்டல அலுவலகம் முன், ஏ.ஐ.டி.யு.சி., தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொருளாளர் ரவி தலைமையில் நடந்தது. கொரோனா ஊரடங்கு நிலையிலும் முன் களப்பணியாளர்களாக உள்ளாட்சி பணியாளர்கள் செயல்படுகின்றனர். தூய்மை பணியாளர் உள்ளிட்ட உள்ளாட்சி முன்களப்பணியாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் மண்டல அலுவலகம் முன், ஏ.ஐ.டி.யு.சி., தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொருளாளர் ரவி தலைமையில் நடந்தது. கொரோனா ஊரடங்கு நிலையிலும் முன் களப்பணியாளர்களாக உள்ளாட்சி பணியாளர்கள் செயல்படுகின்றனர். தூய்மை பணியாளர் உள்ளிட்ட உள்ளாட்சி முன்களப்பணியாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் முக கவசம், கையுறை, பூட்ஸ், கம்பூட்ஸ், ஏப்ரான், ஜாக்கெட், சானிடைசர், சோப்பு போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அனைத்து உள்ளாட்சி பணியாளர்களும் பணிக்கு செல்லும் முன், ஆக்சி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனாவால் இறக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். அத்தொழிலாளர் குடும்பத்தில் உள்ளவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, இடையன்காட்டுவலசு வார்டு அலுவலகம் முன், துணை செயலாளர் ஞானசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X