பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பரவலை தடுக்க பரிசோதனையை அதிகப்படுத்த முடிவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: மாநகர பகுதியில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் தொற்று அதிகமாக இருக்கிறது. தொற்றின் பாதிப்புக்கு ஏற்ப கொரோனோ பரிசோதனை எடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பட்டது. மாநகராட்சியில், 10 மையங்கள், அரசு மருத்துவமனை,

ஈரோடு: மாநகர பகுதியில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் தொற்று அதிகமாக இருக்கிறது. தொற்றின் பாதிப்புக்கு ஏற்ப கொரோனோ பரிசோதனை எடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பட்டது. மாநகராட்சியில், 10 மையங்கள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் வீடு, வீடாக சென்று, 10 நடமாடும் வாகனங்கள் மூலம், முகாம் நடத்தப்பட்டு, தொற்று பரிசோதனை மாதிரி எடுக்கப்படுகிறது. தினமும், 3,000 பேர் அளவுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று முன் தினம் அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் தற்போது, 3,000 பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அதன்படி மாநகர் பகுதியில், தினமும், 4,000 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யும்போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்படும். ஒரு காம்பவுண்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த காம்பவுண்டில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X