பொது செய்தி

தமிழ்நாடு

காளிங்கராயனில் ஜூலை 1ல் பாசனத்துக்கு நீர்திறக்க கோரிக்கை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கலெக்டர் கதிரவனிடம், நேற்று அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காளிங்கராயன் பாசன பகுதிக்கு, ஜூன், 15 முதல் ஏப்., 30 வரை நீர் திறக்கப்படும். காளிங்கராயன் கால்வாயில், 76.77 கோடி ரூபாயில், இரு ஆண்டு ஒப்பந்தத்தில், 21 பாலம், 95 மதகுகள், தடுப்பு சுவர் பராமரிப்பு, சிறு

ஈரோடு: காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கலெக்டர் கதிரவனிடம், நேற்று அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காளிங்கராயன் பாசன பகுதிக்கு, ஜூன், 15 முதல் ஏப்., 30 வரை நீர் திறக்கப்படும். காளிங்கராயன் கால்வாயில், 76.77 கோடி ரூபாயில், இரு ஆண்டு ஒப்பந்தத்தில், 21 பாலம், 95 மதகுகள், தடுப்பு சுவர் பராமரிப்பு, சிறு வாய்க்காலில், 1.5 கி.மீ.,க்கு கான்கிரீட் பராமரிப்பு போன்ற பணிகள் நடக்கின்றன. இப்பணியை விரைவாக முடிக்க உதவியாக, கடந்த பருவத்தில், ஏப்., 30க்கு பதில் மார்ச், 30ல் நீர் நிறுத்தப்பட்டது. ஆனால், பணியை, எட்டு முதல், 10 ஒப்பந்ததாரரிடம் வழங்காமல், நான்கு பேரிடம் வழங்கியதால், விரைவில் பணி முடிய வாய்ப்பில்லை. பவானிசாகர் அணையில், இன்று(நேற்று) மதியம், 12:00 மணி நிலவரப்படி, 89.05 அடி நீர் உள்ளது. காளிங்கராயன் பாசன பகுதியில் மழை இல்லை. பயிரிடப்பட்ட கரும்பு, வாழை கருகுகிறது. நடப்பு பருவத்தில், 2,500 ஏக்கர் வாழை, 5,000 முதல், 7,000 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வர். தவிர, மஞ்சளுக்கு ஏற்ற ஜூனில் சாகுபடி செய்ய நீர் தேவை. மஞ்சள், நெல் போன்ற சாகுபடி பணி தொடங்க முடியவில்லை. வரும், 30க்குள் பணியை நிறைவு செய்து, ஜூலை, 1ல் நீர் திறந்தால் மட்டும், 24 ஆயிரத்து, 500 ஏக்கரில் சாகுபடி செய்து மகசூல் ஈட்ட முடியும். அதற்கு, மாவட்ட நிர்வாகம் சரியாக திட்டமிட்டு, முன்னதாக நீர் திறப்பை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X