பொது செய்தி

தமிழ்நாடு

மண் பரிசோதனை அவசியம்: வேளாண் அதிகாரி தகவல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னிமலை: சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் அதிகாரி சங்கர் விடுத்துள்ள அறிக்கை: பயிர்களுக்கு அளிக்க வேண்டிய அத்தியாவசிய சத்துகளை அளிப்பதும் அத்தியாவசியமற்ற சத்துகளை தவிர்ப்பதும் மண் வளம் கெடாமல் இருக்கவும் மண் பரிசோதனை அவசியமாகிறது. விவசாயிகள் தாங்கள் பயிர் செய்வதற்கு முன், தங்கள் மண்ணில் என்னென்ன சத்துகள் உள்ளன. ஒவ்வொரு பயிருக்கு தேவையான அத்தியாவசிய

சென்னிமலை: சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் அதிகாரி சங்கர் விடுத்துள்ள அறிக்கை: பயிர்களுக்கு அளிக்க வேண்டிய அத்தியாவசிய சத்துகளை அளிப்பதும் அத்தியாவசியமற்ற சத்துகளை தவிர்ப்பதும் மண் வளம் கெடாமல் இருக்கவும் மண் பரிசோதனை அவசியமாகிறது. விவசாயிகள் தாங்கள் பயிர் செய்வதற்கு முன், தங்கள் மண்ணில் என்னென்ன சத்துகள் உள்ளன. ஒவ்வொரு பயிருக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் எவை என்பதை அறிய மண் பரிசோதனை அவசியம். மண் பரிசோதனை மூலமாக மண்ணில் உள்ள அங்கக கரிமம், பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல்சத்து, நுண்ணூட்ட சத்துகளின் அளவு, மண்ணின் கார, அமில தன்மை ஆகியவை பரிசோதனை செய்யப்படுகிறது, இதன் மூலமாக எந்தெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் சாகுபடி செய்யலாம், எவை எல்லாம் தவிர்க்க வேண்டிய பயிர்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது. சென்னிமலை, ஈரோடு வட்டாரத்தில் நடப்பு ஆண்டு, 1,000 மண் மாதிரி எடுக்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை கட்டணமாக, 20 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. நடமாடும் மண்பரிசோதனை பஸ் மூலமும், மண் பரிசோதனை முகாம்கள் கிராமங்களில் நடத்தப்பட்டு நேரடியாக மண் மாதிரி பெறப்பட்டு அன்றைய தினமே பரிசோதனை முடிவு தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாசன நீரும் ஆய்வு செய்யப்பட்டு அவை சாகுபடிக்கு உகந்ததா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X