பொது செய்தி

தமிழ்நாடு

பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்ட தொழிலாளர்கள்; பரிசோதனையில் எட்டு பேருக்கு தொற்று உறுதி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவித்த கர்நாடக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர். மாநில எல்லையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.கர்நாடக மாநிலம், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தங்கி பல்வேறு

புன்செய்புளியம்பட்டி: ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவித்த கர்நாடக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர். மாநில எல்லையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


கர்நாடக மாநிலம், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த, 141 பேரை தொழிற்சாலை நிர்வாகத்தினர் வாகனங்களில் ஏற்றி கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர்களை நேற்றுமுன்தினம் பாதிவழியில் சத்தியமங்கலத்தில் இறக்கி விட்டு வாகன ஓட்டுனர் திரும்பிச் சென்றார். தொழிலாளர்கள் இரவு நேரத்தில் ஊருக்கு செல்ல முடியாமல் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் அருகே தவித்தபடி நின்றிருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினர். அதிகாரிகளின் முயற்சியால் இரவு நகராட்சி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று, 141 பேரையும் வாகனங்கள் ஏற்பாடு செய்து மாநில எல்லையான தாளவாடிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடக அரசு அனுமதியளிக்கும் என்ற நிலையில், 141 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 133 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. அதில், 20 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தனி வாகனத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தொற்று இல்லாத, 113 கர்நாடக தொழிலாளர்களுக்கு நெகடிவ் சான்றிதழ் வழங்கப்பட்டு கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று உறுதி செய்யப்பட்ட எட்டு பேர், தாளவாடி மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X