பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை பதிவேடால் தொற்று பரவலை தடுக்க வெயிலில் காயவைத்து பயன்படுத்தும் பணியாளர்கள்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கோபி: அரசு மருத்துவமனையில் கையாளும் பதிவேடுகள் முதல் கோப்புகள் வரை, தொற்று பரவுவதை தடுக்க, வெயிலில் வைத்து பயன்படுத்துகின்றனர்.கோபி அரசு மருத்துவமனையில், மருத்துவ அலுவலர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அங்கு, நிர்வாக ரீதியாக எண்ணற்ற பதிவேடுகள், கோப்புகள் கையாளப்படுகின்றன. மருத்துவம், ஊரக நலப்பணி இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோரின் செயல்முறை,

கோபி: அரசு மருத்துவமனையில் கையாளும் பதிவேடுகள் முதல் கோப்புகள் வரை, தொற்று பரவுவதை தடுக்க, வெயிலில் வைத்து பயன்படுத்துகின்றனர்.


கோபி அரசு மருத்துவமனையில், மருத்துவ அலுவலர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அங்கு, நிர்வாக ரீதியாக எண்ணற்ற பதிவேடுகள், கோப்புகள் கையாளப்படுகின்றன. மருத்துவம், ஊரக நலப்பணி இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோரின் செயல்முறை, உத்தரவு, தின வருகைப்பதிவேடு என, வார்டு பணியாளர் முதல் மருத்துவ அலுவலர் வரை பராமரிக்கப்படுகிறது. இவற்றை, அனைத்து பணியாளர்களும் கையாளுவதால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆனந்த் கூறியதாவது: இங்கு, மருத்துவர்கள் உள்பட, 150 பேர் உள்ளனர். இதனால், வருகைப்பதிவேடு முதல் கோப்புகள் வரை வெயிலில் வைப்பதால், தொற்று கிருமி இருந்தாலும், வெப்பத்துக்கு அழிந்து விடும் என்பதால், இம்முறையை கையாளுகிறோம். இதேபோல், வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது, அதை வெயிலில் சில மணி நேரம் வைத்திருந்து பயன்படுத்துவதால், தொற்று பரவும் அபாயத்தில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X