புதுடில்லி: டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் புதிய சிகிச்சை முறையால் கோவிட் நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து உள்ளனர்.

டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், 36 வயதான சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவர் ஆகிய இரண்டு பேருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆன்ட்டி பாடி தெரபி எனப்படும் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டனர். ஆர்.இ.ஜி.கவ்.2 (REGCov2) டோஸ்கள் செலுத்தப்பட்ட அந்த நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து உள்ளனர்.

இந்த சிகிச்சை முறை ஏற்கனவே எபோலோ, ஹெச்ஐவி போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
'இந்த சிகிச்சை முறையை சரியான வகையில் பயன்படுத்தினால் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான மருத்துவத்தில் புதிய திருப்புமுனையை உருவாக்கும்' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.