சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7,448 மது பாட்டில்கள் பறிமுதல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஊரடங்கு காலத்தில் விற்பனைக்கு இருந்த, 7,448 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: மே, 10 முதல், நேற்று வரை, ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில், 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 134 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் மதுபாட்டில், 1,407, கர்நாடகா மாநில மதுபாட்டில், 4,825 என மொத்தம், 6,232 பாட்டிங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு: ஊரடங்கு காலத்தில் விற்பனைக்கு இருந்த, 7,448 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: மே, 10 முதல், நேற்று வரை, ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில், 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 134 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் மதுபாட்டில், 1,407, கர்நாடகா மாநில மதுபாட்டில், 4,825 என மொத்தம், 6,232 பாட்டிங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 28 லிட்டர் சாராயம், 480 லிட்டர் சாராய ஊறல், 10 டூவீலர், 4 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன, ஈரோடு மாவட்ட உள்ளுார் போலீசார், 203 வழக்குகள் பதிவு செய்து, 205 பேரை கைது செய்தனர். 653 டாஸ்மாக் மதுபானங்கள், கர்நாடகா மதுபானம், 563 என, மொத்தம், 1,216 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. 12 லிட்டர் சாராயம், 50 லிட்டர் சாராய ஊறல், 13 டூவீலர், 4 நான்கு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டன. முழு ஊரடங்கு காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், 336 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 339 பேர் கைதாகினர், டாஸ்மாக் மதுபானம் 2,060, கர்நாடகா மதுபாட்டில்கள், 5,388 என மொத்தம், 7,448 கைப்பற்றப்பட்டன. மேலும், 40 லிட்டர் சாராயம், 530 லிட்டர் சாராய ஊறல், 23 டூவீலர், எட்டு நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மது கடத்தல், விற்பனை, சாராயம் விற்றல், காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்தல் குறித்து அறிந்தால் பொதுமக்கள் உடனடியாக 9655888100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X