புதுடில்லி: காங்கிரசில் மூன்று தலைமுறைகளாக நான் இருந்தாலும், தற்போது அங்கு பணியாற்றுவது கடினமாகிவிட்டது என பா.ஜ.,வில் இணைந்த ஜிதின் பிரசாதா தெரிவித்து உள்ளார்.

உ.பி.,யில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளும், அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த துவங்கியுள்ளன.இதன் துவக்கமாக, உ.பி., - காங்.,கைச் சேர்ந்த, இளம் தலைவர் ஜிதின் பிரசாதா, அக்கட்சியில் இருந்து விலகி, நேற்று அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பாலுானி முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.

இது தொடர்பாக ஜிதின் பிரசாதா தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: பாஜ.,வில் இணைவதற்கு அமித்ஷா மற்றும் ஜேபி நட்டாவிடம் நான் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. கட்சி எனக்கு என்ன பணி கொடுக்கிறதோ அதனை நான் செய்வேன். அதில், கட்சி, ராகுல் என்பது கேள்வி அல்ல. காங்கிரஸ் எனக்கு எதுவும் செய்யவில்லை எனக்கூறியதில்லை. எனக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்கியது.

நான் மூன்று தலைமுறைகளாக காங்கிரசில் இருந்தாலும், தற்போது அங்கு பணியாற்றுவது மிகக்கடினம். தற்போது, மக்கள் பிரதமர் மோடியுடன் உள்ளனர் என நினைக்கிறேன். எனவே, பா.ஜ.,வில் இணைவதன் மூலம் பொது மக்களுக்கு பணியாற்ற முடியும் என நினைக்கிறேன். முதல்வர் யோகியுடன் இணைந்து நிறைய பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE