சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலங்களில் புகுந்த யானை கூட்டம்; விரட்டியடித்த விவசாயிகள்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பு.புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில்,

பு.புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை தாளவாடி, பையனாபுரம் வனப்பகுதியில் இருந்து, 10க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறின. பையனாபுரம் கிராமத்துக்குள் புகுந்து, விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை சேதப்படுத்தின. விவசாய நிலங்களில் யானைகள் நடமாடுவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை சத்தம் போட்டும் பட்டாசுகள் வெடித்தும் விரட்டினர். விவசாயிகள் சத்தம் போடுவதை கண்ட யானைகள் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறி பையனாபுரம் பகுதியிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தார்ச் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. தினமும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளதால் வனப்பகுதியை ஒட்டி ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள அகழியை ஆழம் மற்றும் அகலப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X