சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் கடத்தல்: 3பேர் கைது

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பவானி: கொரோனா ஊரடங்கின் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சிலர் கள்ளச்சாரயத்தை காய்ச்சியும், கடத்தி வரும் சம்பவமும் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டம், பவானி சப் -டிவிஷன் போலீசாருக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சித்தோடு அடுத்துள்ள நசியனூர், கந்தம்பளையம் காரைவாய்க்காலை சேர்ந்த, முருகேசன்,

பவானி: கொரோனா ஊரடங்கின் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சிலர் கள்ளச்சாரயத்தை காய்ச்சியும், கடத்தி வரும் சம்பவமும் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டம், பவானி சப் -டிவிஷன் போலீசாருக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சித்தோடு அடுத்துள்ள நசியனூர், கந்தம்பளையம் காரைவாய்க்காலை சேர்ந்த, முருகேசன், 53, ஊணாத்திபுதூரில் பிளாஸ்டிக்கேனில், 50 லிட்டர் சாராயத்தை ஊறல் போட்டு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார் அவரை கைது செய்து, அந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதே போல், அம்மாபேட்டை அடுத்த குருவரெட்டியூர், பாலமலை அடிவாரத்தில், அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றிருந்தனர். அப்போது அந்த வழியாக, ஸ்பிளண்டர் பைக்கில், வந்த இரண்டு பேரை போலீசார் நிறுத்தி விசாரிக்கையில், குருவரெட்டியூரை சேர்ந்த, சஞ்சய், 23, பூதப்பாடியை சேர்ந்த, கலையரசன், 22, என்பது தெரிந்தது. இருவரும், ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேனில், சாராயத்தை கடத்தி வந்துள்ளதும் தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X