பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணத்தொகை பட்டியலில் கோவில் பணியாளர் 676 பேர்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சேலம்: கோவில் பணியாளர், 676 பேர், நிவாரண உதவி தொகை பெற பட்டியல் தயார் செய்யப்பட்டது. சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அர்ச்சகர், பூசாரிகள், பட்டாச்சாரியர்கள், பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பக்தர்கள் வழங்கும் தட்டு காணிக்கை ஊதியமாக கிடைத்தது. ஊரடங்கால், அதுவும் கிடைக்காததால், பூசாரிகள், கோவில்

சேலம்: கோவில் பணியாளர், 676 பேர், நிவாரண உதவி தொகை பெற பட்டியல் தயார் செய்யப்பட்டது. சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அர்ச்சகர், பூசாரிகள், பட்டாச்சாரியர்கள், பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பக்தர்கள் வழங்கும் தட்டு காணிக்கை ஊதியமாக கிடைத்தது. ஊரடங்கால், அதுவும் கிடைக்காததால், பூசாரிகள், கோவில் பணியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.


இதுகுறித்து, சேலம் மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவில்களில் மாத ஊதியம் பெறாமல் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற, சேலம் மாவட்டத்தில், 363 பேர், தர்மபுரி மாவட்டத்தில், 313 பேர் என, 676 பூசாரிகள் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், நிவாரண தொகை, பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X