பொது செய்தி

தமிழ்நாடு

கருணை நியமன வாரிசு வேலை: 100 சதவீதம் வழங்க வலியுறுத்தல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் ரமேஷ், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய மனு: பணி காலத்தில் இறக்க நேரிடும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்குவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது கருணை அடிப்படையில் நியமனம், ஆண்டுக்கு ஏற்படும் மொத்த காலி பணியிடத்தில், 25

சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் ரமேஷ், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய மனு: பணி காலத்தில் இறக்க நேரிடும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்குவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது கருணை அடிப்படையில் நியமனம், ஆண்டுக்கு ஏற்படும் மொத்த காலி பணியிடத்தில், 25 சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. இதனால், பதவி உயர்வு பாதிக்காதபடி, கருணை நியமனத்தை, 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடம் இல்லையெனில், அதே மாவட்டத்தில், வேறு துறையில் உள்ள காலி இடத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதுவும் இல்லையெனில், அருகிலோ, வேறு மாவட்டத்திலோ பணி வழங்கலாம். ஏற்கனவே உள்ள உத்தரவுப்படி, கல்வி தகுதிக்கு ஏற்ப, தொழில் நுட்ப பணியிடங்களிலும், பணி அமர்த்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, வாரிசுதாரர்கள், 18 வயது கடந்து, மூன்று ஆண்டுக்குள் வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்ற தளர்வு அளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X