பொது செய்தி

தமிழ்நாடு

தரமாக சாலை அமைக்க பச்சமலை மக்கள் தர்ணா

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
தம்மம்பட்டி: தரமான முறையில் சாலை அமைக்கக்கோரி, பச்சமலை மக்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி, பச்சமலையில், 32 கிராமங்கள் உள்ளன. அதற்கு, தம்மம்பட்டி வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சாலை செல்கிறது. கடந்த பிப்ரவரியில், உதம்பியத்தில் இருந்து, மாயம்பாடி வரை, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதியில், 2 கி.மீ., தூரம், 2.57 கோடி ரூபாயில் தார்ச்சாலை,

தம்மம்பட்டி: தரமான முறையில் சாலை அமைக்கக்கோரி, பச்சமலை மக்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் மாவட்டம், கெங்கவல்லி, பச்சமலையில், 32 கிராமங்கள் உள்ளன. அதற்கு, தம்மம்பட்டி வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சாலை செல்கிறது. கடந்த பிப்ரவரியில், உதம்பியத்தில் இருந்து, மாயம்பாடி வரை, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதியில், 2 கி.மீ., தூரம், 2.57 கோடி ரூபாயில் தார்ச்சாலை, சாலையோர கான்கிரீட் தடுப்பு அமைக்கும் பணி நடந்தது. கடந்த, 5 இரவு பெய்த கோடை மழையில், சாலையில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் தடுப்புகளும் சரிந்து விழுந்தன. இதுகுறித்து, கிராம மக்களும், தமிழக அரசுக்கு புகார் அனுப்பினர். கடந்த, 7ல், வன அலுவலர் குழுவினர் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பினர். நேற்று, சாலையை சீரமைக்க, ஒப்பந்ததாரர், பணியாளர்களுடன் வந்தார். இதையறிந்த மக்கள், அப்பணியை தடுத்து நிறுத்தி, 'அரசு அறிவித்துள்ள அளவுகளின்படி, சாலையை பெயர்த்து விட்டு புதிதாக சாலை அமைக்க வேண்டும். தரமற்ற சாலை அமைத்தது குறித்து, விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் பேச்சு நடத்தியும் பலன் இல்லாததால், ஒப்பந்தாரர், பணியாளர்கள் சீரமைப்பு பணியை மேற்கொள்ளாமல் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X