சாராய தயாரிப்பை தடுக்க முடிவு; காய்ச்சுவோர், விற்போர் விபரம் சேகரிக்கும் உளவுத்துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாராய தயாரிப்பை தடுக்க முடிவு; காய்ச்சுவோர், விற்போர் விபரம் சேகரிக்கும் உளவுத்துறை

Added : ஜூன் 10, 2021
Share
மேட்டூர்: கொளத்தூரில், கள்ளச்சாராய தயாரிப்பை தடுக்க, காய்ச்சுவோர், விற்போர், சந்துக்கடைகளில் வெளிமாநில மது விற்போர் விபரங்களை, உளவுத்துறை போலீசார் சேகரிக்கின்றனர்.மேட்டூர் தாலுகா, காவிரி கரையோரம், கொளத்தூர் ஒன்றியம் உள்ளது. அதில், 14 ஊராட்சிகள் உள்ளன. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள இந்த ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகள், காவிரி கரையோரம், மலையடிவாரத்தில் உள்ளன.

மேட்டூர்: கொளத்தூரில், கள்ளச்சாராய தயாரிப்பை தடுக்க, காய்ச்சுவோர், விற்போர், சந்துக்கடைகளில் வெளிமாநில மது விற்போர் விபரங்களை, உளவுத்துறை போலீசார் சேகரிக்கின்றனர்.


மேட்டூர் தாலுகா, காவிரி கரையோரம், கொளத்தூர் ஒன்றியம் உள்ளது. அதில், 14 ஊராட்சிகள் உள்ளன. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள இந்த ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகள், காவிரி கரையோரம், மலையடிவாரத்தில் உள்ளன. அங்கு, கள்ளச்சாராய தயாரிப்பு, வெளிமாநில மது விற்பனை எதுவும் நடக்கவில்லை. ஆனால், கடந்த, 10ல், மாநிலம் முழுதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கொளத்தூரில், கள்ளச்சாராய தயாரிப்பு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள், காவிரியில் பரிசல் மூலம் கடத்தி வந்து பதுக்கி விற்கப்படுகிறது. ஒரு மாதத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடகா மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாராய ஊறல், கள்ளச்சாராயத்தை மேட்டூர் கலால், கொளத்தூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபானம் கடத்தல், கள்ளச்சாராயம் தயாரிப்பை தடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இரு நாளாக, உளவுத்துறை போலீசார், கொளத்தூரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போர், சந்துக்கடைகளில் மது விற்போர் விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதனால், ஓரிரு நாளில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸ் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X