பொது செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்ற உத்தரவால் தாரமங்கலத்தில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஓமலூர்: தாரமங்கலத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவால், கலெக்டர் ஆய்வு செய்தார்.தாரமங்கலம் பேரூராட்சி, 3வது வார்டில் வசிப்பவர் சக்திவேல், 45. இவர், சில நாளுக்கு முன், சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். அதில், ஊரடங்கில் பேரூராட்சி சார்பில், 10 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. வீடு

ஓமலூர்: தாரமங்கலத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவால், கலெக்டர் ஆய்வு செய்தார்.


தாரமங்கலம் பேரூராட்சி, 3வது வார்டில் வசிப்பவர் சக்திவேல், 45. இவர், சில நாளுக்கு முன், சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். அதில், ஊரடங்கில் பேரூராட்சி சார்பில், 10 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. வீடு அருகே, குடிநீர் குழாய் அமைத்து தரவேண்டும் என, கூறியிருந்தார். நீதிமன்ற அமர்வு, அதை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து, புகார் குறித்து, கலெக்டர் நிவர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. சம்பந்தப்பட்ட, தண்டு மாரியம்மன் கோவில் தெரு, பழனியாண்டி வேலாயுதம் முதலி தெரு, அம்மானி பழனி முதலி தெருவில், 82 வீடுகள் உள்ளன. 44 வீடுகளில் குடிநீர் இணைப்பு, பொது இடங்களில், 8 இணைப்பு, 3 சின்டெக்ஸ் தொட்டிகள் உள்ளன. அங்கு, கலெக்டர் கார்மேகம், பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்பகுதி மக்கள் பலர் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மேலும், பள்ளி மாணவ, மாணவியர் மஞ்சு, 1,500, ரூபாய், பிரகாஷ், 1,600 ரூபாய், கொரோனா நிவாரண தொகையாக வழங்கினர். அவர்களை, கலெக்டர் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X