பொது செய்தி

தமிழ்நாடு

52 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.26 ஆயிரம் நிவாரணம் வழங்கிய தலைமையாசிரியர்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி டவுன் பஞ்.,ல் 52 தூய்மைப் பணியாளர்களுக்கு, 26 ஆயிரம் ரூபாயை நிவாரண உதவியாக தலைமையாசிரியர் வழங்கினார்.தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் டவுன் பஞ்.,ல் தர்மபுரி மெயின் ரோடு, சேலம் மெயின் ரோடு, வினோபாஜி தெரு, உள்ளிட்ட, 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், 52 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனோ காலத்திலும், சேவை மனப்பான்மையுடன்,

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி டவுன் பஞ்.,ல் 52 தூய்மைப் பணியாளர்களுக்கு, 26 ஆயிரம் ரூபாயை நிவாரண உதவியாக தலைமையாசிரியர் வழங்கினார்.


தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் டவுன் பஞ்.,ல் தர்மபுரி மெயின் ரோடு, சேலம் மெயின் ரோடு, வினோபாஜி தெரு, உள்ளிட்ட, 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், 52 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனோ காலத்திலும், சேவை மனப்பான்மையுடன், நேரம் பார்க்காமல் தங்களின் கடமைகளை செய்து வருகின்ற வர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் மதிய உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். அதன்படி பொம்மிடி அடுத்த நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செந்தில்நாதன், தன் சம்பளத்திலிருந்து, 26 ஆயிரம் ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். இதில் செயல்அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X