பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் மின்கட்டணம் வசூல்: அரூர் மின் நுகர்வோர் புகார்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
அரூர்: கடந்த, 2019 ஜூன் மாதம் செலுத்திய கட்டணத்தையே, மீண்டும் வசூலிப்பதால், கூடுதல் மின்கட்டணம் செலுத்துவதாக மின்நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே, 24 முதல், 7 காலை, 6:00 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும் வரும், 14 காலை வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா

அரூர்: கடந்த, 2019 ஜூன் மாதம் செலுத்திய கட்டணத்தையே, மீண்டும் வசூலிப்பதால், கூடுதல் மின்கட்டணம் செலுத்துவதாக மின்நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே, 24 முதல், 7 காலை, 6:00 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும் வரும், 14 காலை வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக, தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் புகார் கூறுகின்றனர்.


அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கிறது. கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், கடந்த, 2019 ஜூன் மாதம் செலுத்திய கட்டணத்தையே, மீண்டும் இந்த மாதம் கட்ட வேண்டும் என வசூலிக்கப்படுகிறது. இதனால், பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2019 ஜூன் மாதம், 700 ரூபாய் கட்டணம் செலுத்திய ஒரு மின்நுகர்வோர் கடந்த, ஐந்து மாதங்களாக வீட்டினை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தால் எந்த மின்பயன்பாடும் இல்லாத நிலையில், 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையுள்ளது. இவ்வாறு கூறினர். 'குறைவாக மின்பயன்பாடு செய்தவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தியிருந்தால், அடுத்த கணக்கீட்டின்போது கழித்து கொள்ளப்படும்' என, மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X