பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பணிகளை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
தர்மபுரி: 'கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை, யூனியன் அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் கள ஆய்வு செய்து, அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் திவ்யதர்ஷினி பேசினார்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உதவி இயக்குனர்,மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நகர் பகுதிகளை விட

தர்மபுரி: 'கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை, யூனியன் அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் கள ஆய்வு செய்து, அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் திவ்யதர்ஷினி பேசினார்.


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உதவி இயக்குனர்,மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நகர் பகுதிகளை விட கிராமங்களில் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க, பஞ்., தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், யூனியன் கவுன்சிலர்கள், சேர்மன்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து குக்கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்கவும், தூய்மை பணியாளர்கள் மூலம் கிராமங்களில் சேரும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை கண்காணிக்கும் பொருட்டு யூனியன் அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி இயக்குனர் நிலையிலான அலுவலர்கள், தங்களது பகுதிகளில் உள்ள கிராமங்களில் தினந்தோறும் நடக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிவதுடன், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளை அணுக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X