விதி மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு ரூ.29,000 அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதி மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு ரூ.29,000 அபராதம்

Added : ஜூன் 10, 2021
Share
தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட நகை, துணி கடைகளுக்கு, 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கொரோனா பரவலை தடுக்க வரும், 14 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், நகை, துணி, செருப்பு கடைகள், வாகன, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட நகை, துணி கடைகளுக்கு, 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


கொரோனா பரவலை தடுக்க வரும், 14 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், நகை, துணி, செருப்பு கடைகள், வாகன, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடையை மீறி, துணி, நகை உள்ளிட்ட கடைகள் கடந்த சில தினங்களாக திறக்கப்பட்டு வருகிறது. இக்கடைகளுக்கு, நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்த போதும், தடை செய்யப்பட்ட கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தர்மபுரி நான்கு ரோடு அருகே உள்ள நகை கடையின் முன்பக்க கதவை சாத்திய நிலையில், பின் பக்க கதவை திறந்து நகை விற்பனை செய்வதை, நகராட்சி நிர்வாகத்தினர் கண்டு பிடித்தனர். அக்கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதே போன்று சின்னச்சாமி நாயுடு தெருவில் தடையை மீறி செயல்பட்ட துணிக்கடைக்கு, 5,000 ம் ரூபாய் என, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடையை மீறி நேற்று திறக்கப்பட்ட, 20 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகத்தினர், 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X